மக்களே உஷார்..! அதிக லாபம்.. ஆசை காட்டும் கும்பல்.! எச்சரிக்கும் டிஜிபி சைலேந்திரபாபு.!

Default Image

புதிய வகை ரசாயன மோசடி கும்பல் பற்றி ஒரு விழிப்புணர்வு விடியோவை டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ளார். 

தற்போதைய இணையவழி உலகில் ஏரளமான மோசடி கும்பல்கள் வளர்ந்துள்ளன என்றே கூறலாம். அவ்வப்போது தினசரி செய்திகளாகவே, நாம் படித்து வரும் நிலை உருவாகி விட்டது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் அரசு அவ்வபோது விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வெளிநாட்டு அழைப்பு : டிஜிபி சைலேந்திரபாபு தற்போது ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். அதில், புதுவிதமான ஒரு மோசடி பற்றி விளக்கியுள்ளார். அதாவது அந்த கும்பல் வெளிநாட்டில் இருந்து கால் செய்வது போல போனில் அழைப்பார்களாம்.

ரசாயன பொருள் : அப்போது அந்த கும்பல் தங்களுக்கு ஒரு கெமிக்கல் ஒரு லிட்டர் வேண்டும். அதனை இந்தியாவில் நாங்கள் சொல்லும் இடத்தில் வாங்கி வெளிநாட்டுக்கு அனுப்பி வையுங்கள் என கூறுவார்களாம். அதன் படி 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள ரசாயன பொருளையும் வாங்கி அனுப்பிய பின்னர் அதிக பணம் தருவார்களாம்.

ஆசை : பின்னர் மீண்டும் இதே போல 10 லிட்டர் வாங்கி அனுப்புங்கள் என கூறுவார்களாம். அப்போது அதிக லாபம் கிடைக்கிறது என கூறி நீங்கள் ஆசைப்பட்டு லட்சங்களை கொட்டி வாங்கினால், அதனை வாங்குவதற்கு யாரும் வரமாட்டார்கள். நீங்கள் அந்த கம்பேனியை தொடர்பு கொண்டாலும் பிரயோஜனம் இல்லை எனவும்,

இதே போல ஆர்கே இண்டஸ்ட்ரீஸ் எனும் நிறுவனம் பெயரின் இந்த மோசடி நடைபெறுவதாகவும், மேற்கண்ட பெயரில் ஒரு நிறுவனம் செயல்படுவதாகவும், அதற்கும் இந்த மோசடிக்கும் தொடர்பில்லை எனவும் டிஜிபி கூறுகிறார்.

மேலும், இது போன்ற போன் அழைப்புகள் தற்போது அதிகளவில் வருகிறது எனவும், யாரும் அதிக அளவில் லாபம் கிடைகிறது என யாரும் ஏமாற வேண்டாம் என டிஜிபி சைலேந்திரபாபு ஒரு விழிப்புணர்வு விடியோவை வெளியிட்டுள்ளார்.

நன்றி : Sun News

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்