மும்பை போலீஸ் பெயரில் புது மோசடி.? எச்சரிக்கை விடுத்த டிஜிபி சைலேந்திர பாபு.!
சைபர் குற்றங்கள் பற்றி போலியாக வரும் பண மோசடி கால்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோ மூலம் டிஜிபி சைலேந்திர பாபு பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.
தமிழக டிஜிபி சைலேந்திர பாபு சைபர் குற்றங்கள் பற்றி ஓர் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தற்போது அண்மைக்காலமாக வரும் போலி கால்கள் பற்றி விவரித்தார்.
அவர் கூறுகையில், உங்களுக்கு திடீர் என்று ஒரு போன் கால் வரும். நீங்கள் மும்பையில் இருந்து அனுப்பிய பார்சல் திரும்பி வந்துவிட்டது. அதில் போதை பொருள் இருக்கிறது நாங்கள் மும்பை போலீஸ் பேசுகிறோம் என மிரட்டுவார்கள்.
உங்கள் ஆதார், பேங்க் நம்பர் வைத்து தான் பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறுவார்கள். உங்களுக்கு உதவுதாக கூறி வழக்கறிஞரிடம் பேச கூறி கூறுவார்கள். அப்படி ஒருவர் வழக்கறிஞர் என பேசுவார். அவர் போலீசை சமாளிக்க பணம் கேட்பார். இல்லை என்றால் உங்களை கைது செய்வார்கள் என மிரட்டுவார்கள்.
நம்மை போலீஸ் கைது செய்துவிடுமோ என நீங்களும் பணம் கொடுப்பீர்கள். அடுத்து மீண்டும் கேட்பார்கள். அப்படி தமிழ்நாடு சைபர் கிரைம் துறைக்கு இதுவரை 60 ஆயிரத்திற்கு மேல் புகார் வந்துவிட்டது. அப்படி ஒரு கால் வந்தால் உடனே கட் செய்து விடுங்கள். அந்த நம்பரை பிளாக் செய்து விடுங்கள் என அந்த விழிப்புணர்வு வீடியோவில் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார்.