புகார் தர வருவோரை கேலி செய்ய கூடாது.. கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.! டிஜிபி சுற்றறிக்கை.!
காவல் நிலையத்தில் புகார் அளிக்க வருவோரை கனிவுடன் நடத்த வேண்டும். அவர்களை கேலி செய்ய கூடாது என சில அறிவுறுத்தல்களை டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை மூலம் காவலர்களுக்கு அனுப்பியுள்ளார்.
காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வருவோரை சரிவர நடத்துவதில்லை அவர்கள் தாங்களை தான் பெரிய அதிகாரிகள் என சிலர் நினைத்து செயல்படுகின்றனர் என்ற புகார்கள் அவ்வப்போது எழுவது உண்டு. தற்போது அது குறித்து டிஜிபி சைலேந்திரபாபு ஓர் அறிக்கை ஒன்றை அனைத்து காவலர்களுக்கும் அனுப்பி உள்ளார்.
அது காவலர்கள் புகார் கொடுக்க வருபவரை எப்படி நடத்த வேண்டும் எனவும், அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அதில், ‘ காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வரும் பொது மக்களிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்க வருவோரை கேலி செய்வதோ, துன்புறுத்துவதோ கூடாது. அது காவல்துறைக்கு உள்ள நற்பெயரை கெடுக்கும் விதமாக அமையும்.
காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். நாங்கள் அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற இறுமாப்புடன் சில காவலர்கள் நடந்து கொள்கிறார்கள். அந்த எண்ணம் இருக்கவே கூடாது. ‘ என்று அனைத்து காவலர்களுக்கும் சுற்றறிக்கையை டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பியுள்ளார்.