கோவை கார் வெடிப்பு விபத்து தொடர்பாக டிஜிபி சைலேந்திர பாபு, தமிழக தலைமைசெயலர் இறையன்பு ஆகியோரதலைமை செயலகத்தில் மத்திய உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, ஏடிஜிபி டேவிட்சன் தேவர்சிவாதம் ஆகியோர் உடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கோவை உக்கடம் அருகே கோட்டைமேடு பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த ஜமேஷ் முபின் உடல் கருகி உயிரிழந்தார்.
இந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு ஜமேஷ் முபினுக்கு உதவி செய்த 5 பேரை உபா சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், கோவையில் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ அதிகாரிகள் தனி தனி குழுக்களாக பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, டிஜிபி சைலேந்திர பாபு, தமிழக தலைமைசெயலர் இறையன்பு ஆகியோரதலைமை செயலகத்தில் மத்திய உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, ஏடிஜிபி டேவிட்சன் தேவர்சிவாதம் ஆகியோர் உடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவை கார் வெடிப்பு தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இனி எடுக்கப்போகும் நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றை குறித்து ஆலோசிக்க பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…