புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள சைலேந்திரபாபு அவர்கள், மதுரையில் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை.
புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள சைலேந்திரபாபு அவர்கள், மதுரையில் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த காவல் ஆணையர்கள், டிஐபி உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், குற்ற சம்பவங்களில் தொடர்புடைய ரவுடிகள் மீது எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது. குற்றத்தடுப்பு பணிகள் குறித்தும் அறிவுரை வழங்கியுள்ளார். சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மதுரையை பரபரப்பாக்கிய குழந்தை விற்பனை சம்பவம் தொடர்பாகவும் கேட்டறிந்தார். பின் சிறப்பாக செயல்பட்ட 18 காவல்துறை அதிகாரிகளுக்கு ரூ.5 ஆயிரம் வகுமதி மற்றும் பாராட்டு சான்றிழ்களை கொடுத்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…