இந்த சம்பவம் நள்ளிரவில் நடந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கொலைசெய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனின் உடல் திருச்சி, திருவெறும்பூரில் 30 குண்டுகள் முழங்க, காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், ஏடிஜிபி தாமரைக்கண்ணன் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள், ஆடு திருடிய கும்பலால் கொல்லப்பட்ட சிறப்பு எஸ்.ஐ பூமிநாதன் வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய டிஜிபி சைலேந்திர பாபு, எஸ்.ஐ.பூமிநாதன் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மறைந்த பூமிநாதன் விவேகமான முறையில் பணியாற்ற கூடியவர். ஏற்கனவே தீவிரவாத தடுப்பு பயிற்சியில் ஈடுபட்ட பூமிநாதன் முதலமைச்சர் பதக்கத்தையும் வென்றுள்ளார். ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் கைத்துப்பாக்கிகள் எடுத்துச் செல்லலாம் உயிருக்கு ஆபத்து என்கிறபோது துப்பாக்கிகளை பயன்படுத்த காவல்துறையினர் தயங்க கூடாது என காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.மேலும், பூமிநாதனை கொலை செய்த கொலையாளியின் தாயாருக்கு போன் செய்து அறிவுரையும் வழங்கியுள்ளார்.