தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில், தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை மானியக்கோரிக்கையின் போது காவல்துரைய்யின் மீதான அதிருப்தியை இந்தக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சியினர் பேச உள்ளனர்.இந்நிலையில், டிஜிபி அலுவலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட கன்காணிப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘பொதுமக்கள் எவ்வித போராட்டத்தில் ஈடுபட்டாலும், அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும், பிரச்னையை பெரிதாக்கும் வகையில் செயல்படக் கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஜாதி, மத ரீதியான மோதல்கள் ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், காவல் நிலையங்களில் நடக்கும், இறப்புகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும். இதற்காக, குற்றவாளிகள், குற்றம் சாட்டப்படும் நபர்களிடம், பகல் நேரங்களில் மட்டுமே விசாரணை நடத்த வேண்டும். விசாரணைக்கு பின் அவர்களை, காவல் நிலையங்களில் இரவு நேரத்தில் தங்க வைக்கக் கூடாது என்றும், குறிப்பாக, பெண் கைதிகளை கண்டிப்பாக காவல் நிலையங்களில் தங்க வைக்கக் கூடாது என்றும். இந்நிலை ஏற்பட்டால்,இது குறித்து உயர் அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணியில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்றது.…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாத தொடக்க நாளான இன்று (மார்ச் 1) கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது.…
சென்னை : இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முதலே பிறந்தநாள் கொண்டாட்ட…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையேயான வெள்ளை மாளிகையில் நடந்த…