இன்று கார்த்திகை மகாதீபம்…….திருவண்ணாமையில் குவிந்த லட்சக்கணக்கான மக்கள்..!!
திருவண்ணாமலை கார்த்திகை திருவிழா முக்கிய நிகழ்வான மகாதீபம் இன்று ஏற்றபடுகிறது.
மகா தீபம் என்றழைக்கப்படும் ஜோதியாக எழுந்தருளும் சிவபெருமான் காட்சி தரும் இந்த அற்புதமான நிகழ்வானது வருடம் தோறும் கார்த்திகை மாதம் நடைபெறுகிறது.
இந்த ஜோதி தரிசனத்தை நாம் காண நமக்கு வாய்ப்பளித்தவர்கள் திருமால், பிரம்மதேவர்.ஆம் திருமாலுக்கும், பிரம்மனுக்கும் இடையே யார் பெரியவன் என்ற போட்டி நிலவியதாவும் இந்த போட்டியில் தலையிட்ட சிவபெருமான் தன் அடிமுடியை யார் காண்கின்றாரோ அவரே பெரியவர் என்ற புராண வரலாறு கூறுகிறது. இந்நிலையில் தான் தன் அவர்கள் இருவருக்கும் அடிமுடி காண முடியாத அக்னி பிழம்பாக காட்சியளித்தார் சிவபெருமான் ஜோதி ரூபமாக நின்ற அந்த நாளே கார்த்திகைதீப திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.தீப திருநாளின் முக்கிய நிகழ்வாக இன்று அதிகாலையில் பரணி தீபம் திருவிழா கடந்த 14 ஆம் தேதி கோவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.மேலும் பிரசித்தி பெற்ற பஞ்சரத தேரோட்டம் இரு தினங்களுக்கு முன்பு தான் நடைபெற்றது.
இன்று மாலை மகாதீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டது.பின் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக மற்றும் அலங்காரம் தீபாராதனை வெகுச்சிறப்பாக நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணிக்கு அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.இந்நிலையில் ஆடும் அர்த்தநாரீஸ்வரராக சிவபெருமான் இன்று மாலை பஞ்சமூர்த்திகள் மற்றும் சுவாமி சன்னதி முன்பு எழுந்தருள்வார்.
இதனைத்தொடர்ந்து இன்று சரியாக 6 மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தருபவரான அர்த்தநாரீஸ்வரர் அவருடைய சன்னதியில் இருந்தபடியே ஆடியவாறு கொடிமரம் முன்பு வந்து நின்று பக்தர்களுக்கு அருட்காட்சி தருவார். அர்த்த நாரீஸ்வரராக காட்சி தந்ததுமே மாலை 6 மணிக்கு சாமி சன்னதி முன் அகண்டதீபம் ஏற்றப்படும். பின்னர் எல்லோரும் உற்று நோக்கி விண்ணை பார்த்து காத்துகொண்டிருக்கும் ஜோதி தரிசனம் 2668 உயர மலை உச்சியில் மகாதீபம் மாலை 6 மணிக்கு ஏற்றப்படும். ஜோதியை காணும் லட்சோப லட்சக்கணக்கான பக்தர்களின் அண்ணாமலைக்கு அரோஹரா….. கோஷம் விண்ணை பிளக்கும் அரோகரா பக்தி கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்வார்கள்.
மகா தீபத்தை முன்னிட்டு பக்தர்கள் காலை முதலே கிரிவலம் செல்வார்கள் இந்த கிரிவலம் சுமார் 14 கிலோமிட்டர் வரை சென்று முடிவடையும்.திருவண்ணாமலையில் மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் மகாதீபம் ஏற்றிய பிறகே வீட்டில் விளக்கு போடுவார்கள். மேலும் குறிப்பிட்டு சொன்னால் தங்கள் வீடுகளிலும், வீடுகளின் முன் அகல்விளக்கு ஏற்றி வழிபடுவார்கள்.திருவிழா கொண்டாடும் திருவண்ணாமலை நகரமே ஒளிவெள்ளத்தில் காட்சியளிக்கும். மக்கள் வீடுகளில் அகல் விளக்கு ஏற்றி மலையை நோக்கி வழிபடுவார்கள்.இதனைக்கான லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுள்ளன.
மகாதீபம் ஏற்றப்படும் கொப்பரையில் தீபம் ஏற்ற 3500 லிட்டர் நெய் தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் பிரம்மாண்ட மேலும் கொப்பரை தயார் நிலையில் வைக்கப்பட்டும். தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் திரி 11 ஆயிரம் மீட்டர் காடா துணியாகும் இந்த கோப்பரை இன்று மாலைக்குள் மலை மீது கொண்டு செல்லப்படுவிடும்.பின்னர் மகாதீபம் ஏற்றும் மலை உச்சியில் ஏற்றப்படும் கோவில் இருந்து பக்தர்கள் அரோகரா முழக்கம் முழங்க ஜோதி தரிசனம் செய்வார்கள்.சிவபெருமான் இன்று ஜோதியாக காட்சி தருகிறார் என்பது இதன் பொருளாகும்.
DINASUVADU