திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது.அதிகாலை 4 மணிக்கு கோவிலின் கருவறை முன்பு பூஜைகளுடன் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உணர்ச்சி பொங்க அரோஹரா கோஷத்துடன் வழிபாடு செய்தனர்.