பவுர்ணமியையொட்டி சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி…!!!
சாப்டூரில் பிரசித்திபெற்ற சதுரகிரி மகாலிங்க சுவாமி கோவில் மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்கு உட்பட் கோவிலாக உள்ளது. மலை மீது அமைந்துள்ளஉள்ள இக்கோவிலில் மாதந்தோறும் அமாவாசை மற்றும் பவுர்ணமி ஆகிய நாள்களில் ஏராளமான பக்தர்கள் மலையேறி செல்வார்கள்.பக்தர்கள் மலையேறுவதற்கு தாணிப்பாறையில் வனத்துறை கேட்டுகள் 4 நாட்களுக்கு திறந்துவிடப்பட்டு மலைப்பகுதிக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படும். மேலும் பக்தர்கள் காலை 6 மணி முதல் மாலை 4 மணிவரை ஏற மற்றும் இறங்குவதற்கு அனுமதி அளிக்கப்படும்.
இந்நிலையில் வருகிற 22 ம்தேதி பவுர்ணமி வருகிறது. இதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 23ந்தேதி (வெள்ளி) வரை சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளது.
அனுமதி தொடர்பாக வனத்துறை தெரிவிக்கையில் சதுரகிரி மலைப்பகுதியில் மழை பெய்கின்ற பட்சத்தில் பக்தர்கள் மலை மீது ஏற அனுமதிக்கப் படமாட்டார்கள்.ஆனால் மழை பெய்யாமல் இருக்கும் போது மட்டுமே மலை மீது ஏற மற்றும் இறங்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்கள் நலன்கருதி முடிவு எடுக்கப்படுகிறது. வருகிற பவுர்ணமியையொட்டி பக்தர்கள் செல்வதற்காக அனுமதி அளிக்கப்படுகிறது. மழை பெய்தால் பக்தர்கள் அனுமதி அளிக்கப்படாது.சூல்நிலையை புரிந்து கொண்டு கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வனத் துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றனர்
பவுர்ணமியையொட்டி பக்தர்கள் சதுரகிரி செல்வதற்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU