இன்று நடைபெறும் வேளாங்கண்ணி தேர்திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் திருவிழா ஆகஸ்ட் மாதம் 29-ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 9-ஆம் தேதி வரை நடைபெறும். இந்நிலையில், கொரோனா காலம் என்பதால் சில முக்கியமான வழிகாட்டும் நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு சென்னை காவல்துறை அறிவுறுத்தியிருந்தது.
அதன்படி அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், பெசன்ட் நகர் திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் ஆண்டுதோறும் வருடாந்திர திருவிழாவில் பக்தர்கள் திரளாக கலந்துகொள்வதுண்டு. ஆனால் பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் பொதுமக்கள் நலன் கருதியும், கொரோனா தொற்று காரணத்தால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.
பொதுமக்களும் பக்தர்களும் தேரோட்ட நிகழ்ச்சியை தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் காண அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இணர் பெசன்ட் நகர் கடற்கரை பகுதிக்கு வாகனத்துடன் வர வேண்டாம் என்றும், போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அன்னை வேளாங்கண்ணி திருத்தலம் மற்றும் பெசன்ட் நகரை சுற்றியுள்ள வர்த்தக வளாகங்கள், கடைகள் செயல்பட 28.08.2021 முதல் 08.09.2021 வரை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…