இன்று நடைபெறும் வேளாங்கண்ணி தேர்திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை – சென்னை காவல்துறை

Default Image

இன்று நடைபெறும் வேளாங்கண்ணி தேர்திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 

ஒவ்வொரு வருடமும் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் திருவிழா ஆகஸ்ட் மாதம் 29-ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 9-ஆம் தேதி வரை நடைபெறும். இந்நிலையில், கொரோனா காலம் என்பதால் சில முக்கியமான வழிகாட்டும் நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு சென்னை காவல்துறை அறிவுறுத்தியிருந்தது.

அதன்படி அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், பெசன்ட் நகர் திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் ஆண்டுதோறும் வருடாந்திர திருவிழாவில் பக்தர்கள் திரளாக கலந்துகொள்வதுண்டு. ஆனால் பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் பொதுமக்கள் நலன் கருதியும், கொரோனா தொற்று காரணத்தால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

பொதுமக்களும் பக்தர்களும் தேரோட்ட நிகழ்ச்சியை தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் காண அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள்  இணர்  பெசன்ட் நகர் கடற்கரை பகுதிக்கு வாகனத்துடன் வர வேண்டாம் என்றும், போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.  மேலும்,  அன்னை வேளாங்கண்ணி திருத்தலம் மற்றும் பெசன்ட் நகரை சுற்றியுள்ள வர்த்தக வளாகங்கள், கடைகள் செயல்பட 28.08.2021 முதல் 08.09.2021 வரை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்