#Breaking:திருத்தணி கோயிலில் பக்தர்களுக்கு தடை..!

Default Image

திருத்தணி கோயிலில் இன்று முதல் 5 நாட்களுக்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக கொரோனா பரவல் அதிகரித்ததனால், தளர்வுகளின்றி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், கொரோனா பரவல் குறைந்ததையடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கோயில் தளங்கள் திறக்கப்பட்டன.

ஆனால்,கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவருகிறது.இதனால்,நேற்று கூடுதல் தளர்வுகள் இன்றிஆகஸ்ட்9 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதாக முதல்வர் அறிவித்தார்.

இந்நிலையில்,திருத்தணி முருகன் கோயிலில் இன்று முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு அதிக அளவிலான பக்தர்கள் கூடுவார்கள்,இதனால் கொரோனா பரவ வாய்ப்பு இருக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்,கோயில் மூன்றாம் பிராகாரத்தில் நடைபெறும் தெப்ப உற்சவ நிகழ்வுகள் https://hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=1506 என்ற இணையதளத்திலும்,யூ -டியூப் தளத்திலும் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்