ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்.!
ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில், பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்.
தமிழ் மாதத்தில் ஆடி மாதமன்று வரும் அமாவாசையில், இறந்துபோன முன்னோர்களுக்கு கடற்கரை, ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் தர்ப்பணம் செய்யப்படுவது வழக்கம். அதேபோல் இன்று முக்கிய புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்த கடற்கரையில் தர்ப்பணம் செய்வதற்காக பக்தர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர்.
ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வரும் பக்தர்கள் ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.