திருவண்ணாமலைக்கு வெளியூர் பக்தர்கள் வரத் தடை..!
பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தீப திருவிழா நடைபெறுகிறது. கொரோனா காரணமாக தீபத்திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்களுக்கு வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை 3 நாட்களுக்கு திருவண்ணாமலை நகருக்குள் வெளியூர் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையை சுற்றி 15 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.