பிரதமர் மோடி வருகை… மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு தடை.!
பிரதமர் மோடி இன்றும் நாளையும் தமிழகத்தில் திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள உள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து இன்னும் சற்று நேரத்தில் தனிவிமானத்தில் புறப்பட்டு கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வரவுள்ளார் .
அதன் பிறகு திருப்பூர் பல்லடத்தில் நடைபெறும் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ளவுள்ளார் . அதன் பிறகு மாலை விமானம் மூலம் மதுரை செல்ல உள்ளார். அங்கு சிறு குறு தொழில் முனைவோர் கருத்தரங்கில் கலந்துகொள்ள உள்ளார்.
Read More – பிரதமர் மோடியின் 2 நாள் தமிழக பயணம்… திருப்பூர், தூத்துக்குடி, நெல்லை முழு விவரம்…
அதன் பிறகு இரவு 8 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்ய செல்ல உள்ளார். பிரதமர் மோடி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரவுள்ளதால் அங்கு இன்று மாலை 4.30 மணி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை செய்யபட்டுள்ளது. மீண்டும் நாளை காலை தரிசனம் செய்ய வழக்கம் போல அனுமதிக்கப்படுவர் என கூற்பட்டள்ளது. மேலும் சித்திரை வீதி பகுதி கடைகளுக்கும் திறக்க அனுமதிஇல்லை என கூறப்பட்டுள்ளது.
Read More – 554 ரயில் நிலையங்கள்… 1,500 ரயில்வே மேம்பாலங்கள் திட்டப்பணிகள்.! பிரதமர் மோடி துவக்கம்.!
தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முழுவதும் பாதுகாப்பு படை வீரர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. பிரதமர் மோடி இன்று இரவு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பள்ளியறை தரிசனம் காண உள்ளார் என கூறப்பட்டுள்ளது.
அதன் பிறகு நாளை தூத்துக்குடி , நெல்லைக்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள செல்ல உள்ளார் .