இன்று முதல் சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி…!
இன்று முதல் அக்டோபர் 5 வரை பக்தர்கள் சதுரகிரி மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி.
புரட்டாசி மாத அமாவாசை மற்றும் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் 13 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று முதல் அக்டோபர் 5 வரை பக்தர்கள் சதுரகிரி மலைக்கோவிலுக்கு சென்று வழிபடலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தாலும், பக்தர்களுக்கு சில நிபந்தனைகளும் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வனப்பகுதிக்குள் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. இரவு நேரங்களில் வனப்பகுதியில் தங்கக் கூடாது. கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீரோடையில் இறங்க கூடாது. கனமழை பெய்யும் பட்சத்தில் அனுமதி ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.