தேவர் ஜெயந்தி விழா.! பசும்பொன்னிற்கு ஓபிஎஸ் வருவதால் இபிஎஸ் வரவில்லையா.?
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவுக்கு ஓபிஎஸ் பசும்பொன்னிற்கு வந்து மரியாதை செலுத்த உள்ளார். இபிஎஸ் தரப்பில் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மட்டும் பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தியில் கலந்துகொள்ள உள்ளனர்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா வரும் அக்டோபர் 30ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர் பிறந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அரசியல் தலைவர் வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் சென்ற வருடம் போல் இந்த வருடமும் வரவில்லை. சென்னையில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துவார். இபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், ஓபிஎஸ் பசும்பொன்னிற்கு வருவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. பசும்பொன்னிற்கு நேரடியாக வந்து மரியாதை செலுத்த உள்ளார் ஓபிஎஸ். இதனால், ஓபிஎஸ் வருகையை அறிந்தே இபிஎஸ் அந்த விழாவை தவிர்தாரா.? இல்லை தேவர் தங்க கவசம் தீர்ப்பு தங்கள் பக்கம் வரவில்லை என தவிர்த்துவிட்டாரா என அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.