பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா : கோவா முதல்வருடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.! 

BJP Leaders Tribute Muthuramalinga Thevar statue

இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவானது, பசும்பொன்னார் பிறந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, பசும்பொன்னில் நடைபெற்று வருகிறது. இன்று காலை முதலே முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் மரியாதையை செலுத்தி வருகின்றனர்.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவரின் உருவச் சிலைக்கு, மாலை அணிவித்து தனது மரியாதை செலுத்தினார். அப்போது கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் உடனிருந்தார். அதன் பின்னர் அண்ணாமலை மாற்று கோவா முதல்வர் பசும்பொன் சென்றனர்.

பசும்பொன்: தேசியமும் தெய்வீகமும் இரு கண்களாக பார்த்தவர் முத்துராமலிங்கத் தேவர் – அண்ணாமலை பேட்டி!

பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் மற்றும் பாஜக தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தேவர் ஜெயந்தி அன்று முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்த பாஜக தேசிய தலைமை கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் அவர்களை அனுப்பி வைத்துள்ளது. தேவர்  அனைவருக்கும் வழிகாட்டியாக வாழ்ந்துகாட்டியவர்.  அவருக்கு இன்று பாஜக சார்பில் மரியாதை செலுத்தியுள்ளோம் என கூறினார்.

அதன் பிறகு கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் பேசுகையில், முத்துராமலிங்க தேவர் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாது , இந்தியாவுக்கே பல்வேறு நல்லதுகள் செய்தவர். அவரது ஜெயந்தி விழாவில் மரியாதை செலுத்துவது எனக்கு நெகிழ்ச்சி மிகு தருணம் என பேசினார் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்