இன்றும் நாளையும் தமிழக முதல்வரின் பயண விவரம் இதுதான்.! 3 மாவாட்ட சூறாவளி பயணம்….
இன்றும் நாளையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு சென்று அங்கு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்குகிறார்.
இன்றும் நாளையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு சென்று அங்கு பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி சென்று, அங்கு காட்டூர் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், 25 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ‘வானவில் மன்றம்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதன் பிறகு இன்று மதியம் 12 மணிக்கு பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவில் அமையவுள்ள சிப்காட் தொழில் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன் பின்னர், பெரம்பலூர் விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுக்க உள்ளார்.
அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 5.15 மணிக்கு கங்கை கொண்ட சோழபுரத்தில் மாளிகைமேட்டில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி பணிகளை பார்வையிடுகிறார் முதல்வர் ஸ்டாலின்.
நாளை காலை 9.30 மணிக்கு அரியலூர், கொல்லாபுரத்தில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்ற உள்ளார்.
இந்த 2 நாள் நிகழ்ச்சி முடிந்ததும் திருச்சிக்கு காரில் புறப்பட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மதியம் தனி விமானம் மூலம் சென்னை திரும்ப உள்ளார். முதல்வரின் 2 நாள் பயணத்திற்கு திருச்சி, பெரம்பலூர், அரியலூர் திமுகவினர் பலத்த வரவேற்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதே போல, காவல்துறையினர் முதல்வருக்கு பலத்த பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.