நீட் தேர்வு வந்த பின் அரசு பள்ளி மாணவர்களின் நிலை! 2017-ல் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்களின் விபரம்!
2017-ல் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்களின் விபரம்.
நெல்லையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், 2015-2016 முதல் 2018-2019-ம் ஆண்டு வரை, அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர், மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர் என்று, மருத்துவ கல்வி இயக்குனரிடம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனையடுத்து, இதற்கு பதிலளித்துள்ள மருத்துவ கல்வி இயக்குனரகம், 2015-2016 மற்றும் 2016-2017-ல் மட்டும், 1,047 அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும், 2017-ம் ஆண்டில், நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பின், 158 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே, மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.