திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி.! அடுத்தடுத்த நிகழ்வுகள்…
திருச்சி விமான நிலையமானது தற்போது 60,723 மீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகளை கொண்டதாக தற்போது விரிவாக்கம் செய்ப்பட்டுள்ளது. இந்த புதிய விரிவாக்கம் செய்ப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி இன்று திருச்சி வந்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் தற்போது திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி. அங்கு அவருக்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் வரவேற்றனர். அதன் பிறகு திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு மூவரும் செல்கின்றனர். அங்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி மாணவ மாணவியர்களுக்கு பட்டம் வழங்குகிறார்.
ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதிவு உயர்வு… தமிழ்நாடு அரசு உத்தரவு!
அதன் பிறகு, ரூ.1,200 கோடியில் மத்திய அரசு விரிவுபடுத்தி உள்ள திருச்சி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்த புதிய விமான நிலையம் மூலம் வருடத்திற்க்கு 44 லட்சம் பயணிகள் பயனடைய உள்ளனர். அதன் பின்னர், ரூ.19,850 கோடியில் தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார். அதே போல முடிவுற்ற திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி இன்று கலந்துகொள்ளும் நலத்திட்ட விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் , ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.