அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பான வழக்குக்கள் உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரையில் நடைபெற்று வருகிறது. இதில் சசிகலா தரப்பு, எடப்பாடி பழனிசாமி தரப்பு , ஓ.பன்னீர் செல்வம் தரப்பு என பல்வேறு வழக்குகள் நடந்து வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளராக பதவியில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவில் பல்வேறு நிகழ்வுகள் நடந்து வண்ணம் இருக்கிறது. இன்னும் நடந்து வருகிறது. அவர் பதவி வகித்து வந்த பொதுச்செயலாளர் எனும் பதவி இன்னும் சிக்கலில் தவித்து வருகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நடைபெற்ற அதிமுக பொது குழுவில் சசிகலா அதிமுகவின் பொது செயலாளர் ஆகவும், டிடிவி.தினகரன் துணை பொதுச்செயலாளர் ஆகவும் நியமிக்கப்பட்டனர். அதன் பிறகு சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா நான்கு வருடம் சிறை சென்று விட்டார்.
சசிகலா நீக்கம் : இந்த சமயத்தில் அதிமுக பிளவுபட்டு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு – எடப்பாடி பழனிச்சாமி தரப்பு என பிரிந்தது. அதன் பிறகு மீண்டும் இவர்கள் இணைந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளராகவும், இணை பொது செயலாளராகவும் நியமிக்கப்பட்ட சசிகலா மற்றும் தினகரனை பதவியில் இருந்தும், கட்சியை விட்டு நீக்கி இருந்தனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் அப்போது நியமிக்கப்பட்டு இருந்தனர்.
இபிஎஸ் – ஓபிஎஸ் பிளவு : அதன் பிறகு மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி – ஓபிஎஸ் தரப்பினரடையே கடந்த 2021 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு மீண்டும் பிளவு ஏற்பட்டது. இதன் காரணமாக 2022 ஜூன் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவர்களை கட்சியை விட்டு நீக்கவும் செய்தனர்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு : இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. அந்த வழக்கு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இருதரப்பு வாதங்களையும் நிறைவு செய்து தீர்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறது. விரைவில் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஸ்
சசிகலா மனு : இதற்கிடையில் சிறையில் இருந்து தண்டனைக்காலம் முடிந்து விடுதலையான விகே.சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓர் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதாவது தன்னை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்க கோரி அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் செம்மலை உயர்நீதிமன்றத்தில் மனு தொடர்ந்து இருந்தார். ஆனால் அந்த மனு நிராகரிக்கப்பட்டது.
கேவியேட் மனு : இதற்கிடையில் நேற்று சசிகலா தரப்பு, உச்ச நீதிமன்றத்தில் கேவியேட் மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளது. அதன்படி அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கு தொடர்வது முன் வந்தால் தனது தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அந்த கேவியேட் மனுவில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என குறிப்பிடப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் : இத்தனை வழக்குகள் நடைபெற்று வரும் சூழலில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் வர உள்ளது. இதில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் யார் போட்டியிடுவார்கள் என்ற எண்ணம் அரசியல் வட்டாரத்தையும் தாண்டி பொதுமக்களிடமும் இந்த கேள்வி எழுந்து வருகிறது. இதற்கான மனுவும் உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரால் கொடுக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…
இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…
சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…