சென்னை : குவைத் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடலை கொண்டு வர, சிறப்பு விமானம் அனுப்பப்பட்டது. 7 தமிழர்கள், கேரளாவைச் சேர்ந்த 23 பேர் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் என 31 பேரின் உடல்கள் கொச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.
உடல்களைப் பெறுவதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி மற்றும் தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொச்சி விமான நிலையத்தில் உள்ளனர்.
கொச்சின் விமான நிலையத்தில் ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. எஞ்சியுள்ள உடல்களை டெல்லி விமான நிலையத்துக்கு கொண்டு சென்று, அங்கிருந்து அவர்களின் ஊர்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உயிரிழந்த 7 தமிழர்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. ராம கருப்பண்ணன்- ராமநாதபுரம், வீராசாமி- தூத்துக்குடி, சின்னத்துரை – கடலூர், முகம்மது ஷரீப் விழுப்புரம், ரிச்சர்டு- தஞ்சாவூர், எபமேசன்- திருச்சி, கோவிந்தன்- சென்னை என தெரிய வந்துள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…