நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம் பற்றிய விரிவுரை!!!
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பரவலாக பேசப்பட்டு வரும் நிகழ்வுகளில் ஒன்று நெடுவாசலில் அமல்படுத்தப்பட்ட ஹைட்ரோகார்பன் திட்டம்.
திட்டம் ஒருபுறம் இருந்தாலும் ஹைட்ரோகார்பன் என்றால் என்ன என்பதை யாரும் இதுவரை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதனை விரிவாக இந்த கட்டுரையில் காண இருக்கிறோம்.
வேதியியல் விளக்கம்:
நாம் பள்ளிப்பருவ வேதியியலை திரும்பி பார்க்கையில், ஹைட்ரொகார்பன் என்பது ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் கலந்த ஒரு கலவையாகும். ஹைட்ரொகார்பனில் கிட்டத்தட்ட 14 வகையான கனிமங்கள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை, ஆல்கேன், ஆல்கைன் மற்றும் ஆல்கீன்.
அதாவது, ஹைட்ரோகார்பன் என்பது மீத்தேன் வகையான வாயுவாகும். குறிப்பாக, எரிவாயுவாக பயன்படுவது ஆல்கேன் எனப்படும் மீத்தேன் வகையாகும். இது, க்ரூட் ஆயில், இயற்கை எரிவாயு மற்றும் சாண எரிவாயுவின் பரவலாக இருக்கும்.
இவ்வகையான வாயுக்கள் சதுப்பு நிலங்களில் அதிகளவில் இருக்கும் ஒன்று. அவ்வப்போது சதுப்பு நிலங்கள் தீப்பற்றி எரிவதற்கு இவ்வகை மீத்தேன்களே காரணம். சூடான வெப்பக்காற்றுடன் உராய்ந்து வினைப்படுகையில் தீ உருவாகும்.
நிலத்தடியில் எப்படி மீத்தேன் கிடைக்கிறது??
இயற்கை பொருள்களான இழை, செடிகொடிகள் மற்றும் மரங்கள், இறந்து மண்ணில் புதையுறும் மனித மற்றும் மிருக உடல்கள் ஆகியவை பாக்டிரியாவுடன் வினைபட்டு கார்பனாக வேதியியல் மாற்றம் பெறுகிறது. மாற்றம் பெட்ரா கார்பன் வெளிமண்டலத்தில் பரவலாக இருக்கும் ஹைட்ரஜனுடன் இணைந்து மீத்தேனாக உருவாகிறது.
இப்படியாக உருவான மீத்தேன் பெரும்பாலும் பூமிக்கடியில் இருக்கும். குறிப்பாக படிவுப்பாறைகளில் பரவிக்கிடக்கும். இந்திய நிலப்பரப்பில் படிவுப்பாறைகள் கங்கை சமவெளிகளில் அதிகமாக இருப்பதாக நிலவியல் தெரிவிக்கின்றன.
இவ்வகையான, படிவுப்பாறைகளின் அருகே துளையிட்டு மீத்தேன் எடுக்கப்படும். அதன்பிறகு உருவாகும் வெற்றிடம் நீர் மற்றும் பாறைகளால் இயற்கையாகவே நிரப்பப்படும்.
விளைநிலங்களின் உயிரோட்டமே இதுபோன்ற மீத்தேன் தான். மீத்தேன் உறிஞ்சப்பட்டால் விளைநிலங்கள் விரைவில் வீணாகும்.
ஹைட்ரோகார்பன் திட்டம்:
இம்முறையான திட்டத்தை தான் தமிழகத்தில் 31 இடங்களில் அமல்படுத்த மத்திய அரசு தமிழக அரசிற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், இதனை செயல்படுத்த கெயில் மற்றும் இந்தியன் ஆயில் போன்ற நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால், பலலட்சக்கணக்கான விலை நிலங்கள் வீணாகும் என்பதால் தொடர்ந்து பல பகுதிகளில் இத்திட்டம் எதிர்க்கப்பட்டு வருகிறது.