பணக்காரன் ஆக வேண்டுமென்ற ஆசை..! 150 கார்களை திருடிய பிரபல கார் திருடன் கைது ..!
ககோவை மாவட்டம் பாப்பம்பட்டி பகுதியைசேர்ந்த அண்ணாமலை என்பவர் தனது ஆம்னி காரை காணவில்லை என சூலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
சூலூர் காவல் ஆய்வாளர் தங்கராஜ் தலைமையில் காங்கேயம்பாளையத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது ஆம்னி காரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
விசாணையில் சென்னையை சார்ந்த பரமேஸ்வரன் என்பவர் முன்னுக்கும் பின்னுக்குமாக பதில் கூறியுள்ளனர்.சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர் .அதில் பரமேஸ்வரன் காரினை திருடி விற்பனை செய்யும் பிரபல கார் திருடன் என்பது தெரியவந்தது.
தமிழ்நாடு ,கேரளா ,ஆந்திரா , மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடக ஆகிய மாநிலங்களில் பரமேஸ்வரன் 150 க்கும் மேற்பட்ட கார்களை திருடி விற்றது தெரியவந்தது. பணக்காரன் ஆக வேண்டுமென்ற ஆசையில் பரமேஸ்வரன் இது போன்று திருடியதாக கூறியுள்ளார். இதையடுத்து பரமேஸ்வரனை போலீசார் ஆம்னி காருடன் கைது செய்து உள்ளனர்.