ஆடி அமாவாசைக்கு புனித நீராட அனுமதியில்லாததால் வெறிச்சோடிய புனித ஸ்தலங்கள்!
கொரோனா வைரஸ் பரவலால் புனித நீராட அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து புனித ஸ்தலங்கலும் வெறிச்சோடி காணப்படுகிறது.
உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்ல கூடிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தாலும், கோவில்களில் கூட்டமாக இருக்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு வருடம் தோறும் புனித நீராடுவதற்காக குவியக்கூடிய கூட்டங்கள் இல்லாமல் புனித ஸ்தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.