ஆளுநர் மீது அவதூறு பேச்சு.! திமுக பேச்சாளர் மீது வழக்குப்பதிய அரசுக்கு பரிந்துரை.!
ஆளுநரை அவதூறாக பேசிய விவகாரத்தில் திமுக பேச்சாளர் மீது ஆளுநரின் துணை செயலாளர் பிரச்சன்னா ராமசாமி காவல்துறையில் புகார்.
விருகம்பாக்கத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் கூட்டத்தில் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தமிழக ஆளுநரை மிகவும் அவதூறாக பேசினார். இதற்கு பலர் தங்கள் எதிர்ப்பு குரலை பதிவிட்டு வருகின்றனர்.
இது குறித்து ஆளுநர் பற்றி அவதூறாகவும், மிரட்டல் விடுத்து பேசியதாகயும் ஆளுநரின் துணை செயலாளர் பிரச்சன்னா ராமசாமி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து அவர் மீது அவதூறு வழக்கு தொடர்வதற்கு அரசுக்கு சென்னை காவல்துறையினர் பரிந்துரை செய்துள்ளனர்.