சென்னை வேப்பேரியை சார்ந்தவர் ஸ்ரீதேவி (48) தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 11-ம் உடல்நிலை குறைவால் இறந்துள்ளார்.
இவருக்கு கடந்த சில நாள்களாக வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அவரை மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்த போது அவருக்கு கர்ப்பப்பை புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது என ஸ்ரீதேவி வளர்ப்பு மகன் முனுசாமி கூறினார்.
இதனால் இவரது இறுதி சடங்கு12-ம் தேதி நடைபெற்றது. இந்த இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் வண்ணாரப்பேட்டை துணை காவல் ஆணையர் சுப்புலட்சுமி கலந்து கொண்டார். பின்னர் ஸ்ரீ தேவியின் உடலை துணை காவல் ஆணையர் சுப்புலட்சுமி , ஆய்வாளர் ரமணி , இந்திராணி மற்றும் வரலட்சுமி ஆகியோர் தங்கள் தோளில் ஸ்ரீதேவி உடலை சுமந்து கொண்டு காசிமேடு மயானம் வரை சென்றனர்.
அங்கு ஸ்ரீதேவி உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…