‘300 நிவாரண மையங்கள்., 65,000 தன்னார்வலர்கள் தயார்..” – உதயநிதி ஸ்டாலின் அப்டேட்.!
தமிழகம் முழுதுவம் மேற்கொள்ளப்பட்டுள்ள கனமழை முன்னேசெரிக்கை நடவடிக்கைகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.
சென்னை : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. சென்னை ரிப்பன் மாளிகையில் கனமழை முன்னெச்செரிக்கை கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு மழை பாதிப்பு குறித்தும், அதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த கட்டுப்பாட்டு அறை பணிகளை தமிழக துணை முதலமைச்சார் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர். அதன் பிறகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி பேசுகையில், “சென்னையில் 89 மீட்பு படகுகள் தயார் நிலையில் உள்ளன. மற்ற மாவட்டங்களில் 130 படகுகள் தாயார் நிலையில் உள்ளன. சென்னையில் மட்டும் 300 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களில் 631 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 931 நிவாரண முகாம்கள் அமைக்கபட்டுள்ளன.
சென்னையில் 15 ஐஏஎஸ் அதிகாரிகளும், மற்ற மாவட்டங்களில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் மீட்பு பணிகள் குறித்த நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர். தமிழ்நாடு முழுக்க 1000 மருத்துவ முகாம்கள் துவங்கி வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 100 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் 13 ஆயிரம் தன்னார்வலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 65 ஆயிரம் தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். தேவைப்பட்டால் அவர்களும் சென்னை அழைத்துவரப்படுவர். எல்லா ஐடி நிறுவனங்களும் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என முன்னரே அறிவிப்பு வழங்கப்பட்டுவிட்டது. காலை முதல் பெய்த கனமழை காரணமாக சென்னையில் மட்டும் 8 மரங்கள் விழுந்துள்ளன. 1 மணிநேரம் மழை விட்டால், கணேசபுரம் , பெரம்பூர் பகுதி சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை எடுத்து விடுவோம்.
கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அழிப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் இன்னும் சற்று நேரத்தில் அறிவிப்பார்.” என்று கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.