2 வது நாளாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆலோசனை
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இன்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தை முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சந்தித்துள்ளார்.
நேற்று முன்தினம் அதிமுக செயற்குழுக்கூட்டம் அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என நீண்ட நாட்களாக கேள்வி வந்த நிலையில் ,அக்டோபர் 7-ஆம் தேதி அதிமுகவின் முதமைச்சர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.ஆனால் இந்த செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இடையே முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக முரண்பாடு எழுந்ததாக தகவல் வெளியானது.
இதனையடுத்து நேற்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம்,மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.இதனால் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தற்போது நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.மேலும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரும் பன்னீர்செல்வத்தை சந்தித்தனர்.
மேலும் நேற்று முதலமைச்சர் பழனிசாமியை அமைச்சர்கள் வேலுமணி,தங்கமணி,உதயகுமார் மற்றும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் சந்தித்தனர்.இந்நிலையில் நேற்று முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த நிலையில் இன்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் இல்லத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சந்தித்துள்ளார்.துணை முதல்வர் பன்னீர் செல்வம் 2ம் நாளாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்! ஆந்திரா ஐடி-யில் இனி ‘ஒர்க் ஃபர்ம் ஹோம்’? முதலமைச்சர் திட்டம்!
February 12, 2025![Andhra Pradesh CM N Chandrababu naidu](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Andhra-Pradesh-CM-N-Chandrababu-naidu.webp)
திமுகவை எதிர்க்க துணிவில்லாமல் ஓடி ஒளிந்தவர் இபிஎஸ்! கடுமையாக சாடிய அமைச்சர் செந்தில் பாலாஜி!
February 12, 2025![senthil balaji edappadi palanisamy](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/senthil-balaji-edappadi-palanisamy-.webp)