மீட்பு பணிகளை துணை முதலமைச்சர் ஆய்வு..! அமைச்சர்கள் விளக்கம்..!
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். கடந்த 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதனால் தமிழகம் முழுவதும் சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் நடைபெறும் இடத்திற்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வருகை தந்து உள்ளார். அவருடன் தேனி எம்பி ரவீந்திரநாத் குமார் வந்து உள்ளார். மீட்புப்பணிகள் குறித்து துணை முதல்வரிடம் அமைச்சர்கள் விளக்கம் கொடுத்து வருகிறார்கள்.அதிலும் குறிப்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் முழு விவரத்தையும் விளக்கி வருகிறார்.
மீட்பு பணி இடத்தில் அதிக நேரம் அமைச்சர் விஜயபாஸ்கர் இருந்ததால் அவரிடம் துணை முதலமைச்சர் விவரங்களை கேட்டு அறிந்தார்.