சென்னை திரும்பிய முதல்வர் பழனிசாமியுடன் துணை முதல்வர் பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு
முதலமைச்சர் பழனிசாமி உடன் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார்.
அரசு முறை பயணமாக முதலமைச்சர் பழனிசாமி இங்கிலாந்து,அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.தனது 13 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று சென்னை திரும்பினார்.
இந்த நிலையில் சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமி உடன் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார் . அரசுமுறை வெளிநாட்டு பயணம் சென்று முதலீடுகளை ஈர்த்துள்ளதற்கு, முதலமைச்சர் பழனிசாமிக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.