தமிழக அமைச்சரவையில் மாற்றம் வருமா என்ற பத்திரிகையாளர் கேள்விக்கு, முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய அமைச்சரவையில் தான் மாற்றம் வருவதாக தகவல் என கூறியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், இன்று டெல்டா மாவட்ட நீர்நிலைகளை தூர்வாரும் பணியை நேரில் ஆய்வு செய்தார். அதன்பின் முதல்வர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய முதல்வர் விவசாயிகளுக்கு நமது ஆட்சி முழு ஆதரவளித்து வருகிறது, விவசாயிகளின் உரிமைகளை அரசு விட்டுக்கொடுக்காது.
சாகுபடிக்காக, வரும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது. இதனை ஒட்டி, காவிரி நீர் பாயும் வழித்தடங்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்று முதல்வர் தெரிவித்தார். ஜூன் 12க்கு முன்பாக தூர்வாரும் பணிகள் முடிவடையும் என்று நம்புகிறேன் என அவர் கூறினார்.
மேலும் தமிழக அமைச்சரவையில் மாற்றம் வருமா? அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்படுமா என்ற பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், ஒன்றிய அமைச்சரவையில் தான் மாற்றம் வரப்போவதாக தெரிகிறது என தெரிவித்தார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…