அரியலூரில் தற்கொலை செய்து கொண்ட மாணவர் விக்னேஷ்க்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இரங்கல்.!

Default Image

அரியலூரில் தற்கொலை செய்து கொண்ட மாணவர் விக்னேஷ்க்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துவுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக இந்த மாதம் நடைபெற உள்ள ம் நீட் தேர்வை தள்ளிவைக்க கோரி பல தலைவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தும் மத்திய அரசு குறிப்பிட்ட தேதியில் தேர்வுகள் நடைபெறும் என திட்டவட்டமாக தெரிவித்தது.வருகின்ற 13-ஆம் தேதி நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற உள்ளது.

இதனிடையே, அரியலூர் மாவட்டம் செந்துரையை அடுத்துள்ள எலந்தங்குழி கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தநிலையில், மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் விக்னேஷ் எடுத்த விபரீத முடிவு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவர் விக்னேஷ் குடும்பத்திற்கு பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், அரியலூர் – இலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் நேற்று மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

மாணவர் விக்னேஷ் அவர்களின் பிரிவால் மிகுந்த துயருற்றருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்த அவர், பெற்றோர்கள் குழந்தைகளை தனிமையில் விடாமல் அவர்களின் விருப்பங்கள் அறிந்து உரிய அறிவுரைகள் வழங்கி அவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாகாமல் பார்த்துக் கொள்ளுமாறும், மாணவர்கள் துணிவுடன் எதையும் எதிர்கொள்ளும் தன்மையையும் விடா முயற்சியையும் வளர்த்துக் கொள்ளவும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்