கடந்த 15-ம் தேதி மகரவிளக்கு தெரிந்தது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி பூஜையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் 48 நாள்கள் விரதத்துக்கு பின் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று சபரிமலையில் உள்ள ஐயப்பனை தரிசனம் செய்தார். நேற்றுமுன்தினம் பிற்பகல் பெரியகுளத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு துணை முதலமைச்சர் புறப்பட்டார்.
ஓ பன்னீர்செல்வம் நேற்றுமுன்தினம் இரவு பம்பைக்கு சென்றார். பம்பை வந்த ஓ. பன்னீர் செல்வத்திற்கு கேரள அதிகாரிகள் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் ஓ பன்னீர்செல்வம் பம்பையிலே இரவு தங்கினார். இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை பம்பை நதியில் நீராடி கரி மலைப்பாதை வழியாக இருமுடி சுமந்தபடி நடந்து சென்று கோவில் சென்றார்.
கோவில் வந்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு கோவில் நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் 18-ம் படி வழியாக இருமுடி சுமந்தபடி ஐயப்பனை தரிசனம் செய்த ஓ. பன்னீர் செல்வத்திற்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது தயாராகி வருகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…