ஐயப்பனை தரிசனம் செய்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்..!

Default Image
  • நேற்றுமுன்தினம் பிற்பகல் பெரியகுளத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு துணை முதலமைச்சர் புறப்பட்டார்.
  •  18-ம் படி வழியாக இருமுடி சுமந்தபடி ஐயப்பனின் தரிசனம் செய்த  ஓ. பன்னீர் செல்வத்திற்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

கடந்த 15-ம் தேதி மகரவிளக்கு தெரிந்தது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி பூஜையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் 48 நாள்கள் விரதத்துக்கு பின் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று சபரிமலையில் உள்ள ஐயப்பனை தரிசனம் செய்தார். நேற்றுமுன்தினம் பிற்பகல் பெரியகுளத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு துணை முதலமைச்சர் புறப்பட்டார்.

ஓ பன்னீர்செல்வம் நேற்றுமுன்தினம் இரவு பம்பைக்கு சென்றார். பம்பை வந்த ஓ. பன்னீர் செல்வத்திற்கு கேரள அதிகாரிகள் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் ஓ பன்னீர்செல்வம் பம்பையிலே இரவு தங்கினார். இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை பம்பை நதியில் நீராடி கரி மலைப்பாதை வழியாக இருமுடி சுமந்தபடி நடந்து சென்று கோவில் சென்றார்.

கோவில் வந்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு கோவில் நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் 18-ம் படி வழியாக இருமுடி சுமந்தபடி ஐயப்பனை தரிசனம் செய்த  ஓ. பன்னீர் செல்வத்திற்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது தயாராகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்