முதல்வராக பதவி வகித்து வரும் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை விராலிமலை வட்டம், குன்னத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற விழாவில் ரூ.6,941 கோடி மதிப்பில் காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். இந்த விழாவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். பின்னர் பேசிய துணை முதல்வர், முதல்வராக பதவி வகித்து வரும் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை கொடுத்து வருகிறார் என கூறியுள்ளார்.
மேலும், ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் முதல்வராக பழனிசாமி இந்த ஆட்சியை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் என்றும் நதிகளை இணைக்க வேண்டும் என்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். எந்தவித குறையும் சொல்லமுடியாத ஆட்சியால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். காவிரி – குண்டாறு இணைப்பு திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் துணைமுதல்வர் ஓபிஎஸ் முதல்வருக்கு புகழாரம் சூட்டியுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…