முதல்வரின் தாயார் மறைவு-மனவேதனை அடைந்தேன்!துனை முதல்வர் இரங்கல்!
முதல்வரின் தாயார் மறைவிற்கு துனை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் தவசாயி சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.முதல்வர் பழனிசாமி தனது தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். முதல்வரின் தாயார் உடலுக்கு அமைச்சர்கள், உறவினர்கள், அதிகாரிகளும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிலையில் முதல்வரின் தாயார் மறைவிற்கு துனை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திகுறிப்பில்:
முதல்வரின் அவர்களின் அன்புத்தாயார் திருமதி.தவுசாயம்மாள் அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன். தாயாரது பிரிவால்வாடும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
மாண்புமிகு முதல்வர் அவர்களின் அன்புத்தாயார் திருமதி.தவுசாயம்மாள் அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன். தாயாரது பிரிவால்வாடும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். pic.twitter.com/WVAtRt7JCs
— O Panneerselvam (@OfficeOfOPS) October 13, 2020