அண்ணா சிலைஅவமதிப்பு..துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்..!
இன்று கன்னியாகுமரி குழித்துறை சந்திப்பு பகுதியில் உள்ள அண்ணா சிலை பீடத்தில் காவிக்கொடி கட்டப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, காவல் துறையினர் அண்ணா சிலை பீடத்தில் கட்டப்பட்ட காவி கொடியை அகற்றினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அண்ணா சிலைஅவமதிப்பு குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள துணை முதல்வர், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் அமைந்துள்ள பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் திருவுருவச் சிலையை மர்மநபர்கள் அவமதிப்பு செய்தும் பீடத்தில் காவிக் கொடியும் கட்டிச் சென்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பொதுவாழ்வில் ஈடுபட்ட மற்றும் சமூகத்திற்காக பாடுபட்ட தலைவர்களை அவமதிக்கும் வகையில், அவர்களின் சிலைகளை களங்கப்படுத்துவது, சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக ஒற்றுமையை சீர்குலைப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் விஷமிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கையை விரைவில் எடுக்கும் என தெரிவித்துள்ளார்.
அவமதிக்கும் வகையில், அவர்களின் சிலைகளை களங்கப்படுத்துவது, சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக ஒற்றுமையை சீர்குலைப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் விஷமிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது மாண்புமிகு அம்மாவின் அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கையை விரைவில் எடுக்கும். (2/2)
— O Panneerselvam (@OfficeOfOPS) July 30, 2020