பாஜகவுக்கு வாழ்த்து தெரிவித்த துணை முதல்வர்…!
அதிமுக துணை முதல்வர் ஓபிஎஸ், தனது ட்வீட்டர் பக்கத்தில் பாஜகவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் 12-ம் தேதி தொடங்கவுள்ளது. அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு, கூட்டணி உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக, அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது.
அதிமுக – பாஜக இடையே தொகுதி பங்கீடு விவகாரத்தில், தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்தானது. இதனையடுத்து, அதிமுக துணை முதல்வர் ஓபிஎஸ், தனது ட்வீட்டர் பக்கத்தில் பாஜகவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த ட்வீட்டர் பதிவில், ‘நடைபெறவுள்ள 2021 – சட்டமன்ற பொதுத் தேர்தலில், அஇஅதிமுக தலைமையிலான வெற்றிக் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழ்நாட்டில் 20 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!’ என பதிவிட்டுள்ளார்.