ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!
வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. தற்பொழுதும், வங்கக்கடலில் உருவாகியிருந்த இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.