“12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கும்”- வானிலை ஆய்வு மையம்
ராமநாதபுரத்திற்கு அருகில் 10 மணி நேரமாக நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்னும் 12 மணிநேரத்தில் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், புயலாக வலுப்பெற்று, இலங்கை திரிகோணமலை பகுதியில் நேற்று இரவு கரையை கடந்தது. இதனையடுத்து நேற்று நள்ளிரவு அல்லது இன்று அதிகாலை பாம்பன் – குமரி இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதன்காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் ராமேஸ்வரம், பாம்பன் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த புரேவி வுயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாகவும், இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் தூத்துக்குடி – பாம்பன் இடையே கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராமநாதபுரத்திற்கு அருகில் 10 மணி நேரமாக நிலைகொண்டுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணிநேரத்தில் வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்காமல் வலுவிழப்பாவதாகவும், இதன்காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
AT 0830 IST, Deep Depression over Gulf of Mannar close to Ramanathapuram District coast remained stationary, about 40 km southwest of Ramanathapuram. To remain stationary over same region and weaken into Depression during next 12 hrs. pic.twitter.com/CM5b9C3iCG
— India Meteorological Department (@Indiametdept) December 4, 2020