தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில்,பல்வேறு இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளது.இதனால்,மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
காற்றழுத்த தாழ்வு பகுதி:
இந்நிலையில்,வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் நாளை (வெள்ளிக்கிழமை) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக, தமிழகத்தில் இன்றும்,நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்றும்,நாளையும் இந்த மாவட்டங்களில் கனமழை:
அதன்படி,இன்று நீலகிரி,கோவை,திருப்பூர்,கிருஷ்ணகிரி,ஈரோடு, தருமபுரி,சேலம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் கணித்துள்ளது. அதைப்போல,நாளை நீலகிரி,கோவை,திருப்பூர்,தேனி, திண்டுக்கல்,கரூர்,நாமக்கல்,திருச்சி,ஈரோடு,கிருஷ்ணகிரி,தருமபுரி, சேலம் ஆகிய 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால்,தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…