காற்றழுத்த தாழ்வு பகுதி..நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.!
வடகிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி. நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால். காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதால் சென்னை உள்ளிட்ட தமிழக பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.