இன்னும் 24 மணி நேரத்தில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்..! – வானிலை ஆய்வு மையம்
வங்க கடலில் இன்னும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும், காற்றழுத்த தாழ்வு பகுதி.
ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது என்றும், இது இன்னும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்,தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் இரண்டு நாளைக்கு கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.