#BREAKING: வங்கக்கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது..!
வங்கக்கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. வடகிழக்கு பருவக்காற்றால் தஞ்சை, நாகை, திருவாரூர், தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்.
நாளை மறுநாள் தென்மேற்கு வங்கக்கடல் அதை ஒட்டிய நிலநடுக்கோட்டுப் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. புதிய காற்றழுத்த தாழ்வால் நாளை மறுநாள் முதல் 19ஆம் தேதி வரை தென் மேற்கு வங்க கடல்- நிலநடுக்கோட்டு பகுதியில் பலத்த சூறாவளி வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவக்காற்றால் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்.
காரைக்கால், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை முதல் டிசம்பர் 19-ம் தேதி வரை தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் டிசம்பர் 19-ஆம் தேதி வரை குமரி கடல் பகுதியில் பலத்த சூறாவளி வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்றும், நாளையும் இலங்கை தெற்கே அடுத்த நிலக்கோடு பகுதியில் பலத்த சூறாவளி வீசும், 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி வீசும் என்பதால் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.