தலைமை ஆசிரியர் பதவிக்கு…கட்டுப்பாடு விதித்து பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு.!
தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு உயர்வு கலந்தாய்வு மூலமாக நிரப்பப்படவுள்ளது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் தற்போது, இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகள் 17 A, 17 8 பிரிவுகளின் கீழ் தண்டனை பெற்ற ஆசிரியர்களை தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பரிந்துரைக்கக் கூடாது.
தண்டனை காலம் முடிவடையாமல் உள்ள ஆசிரியர்களின் பெயர்களையும் பரிந்துரைக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. எந்த புகாருக்கும் உள்ளாகாத பதவி உயர்வுக்கு ஆசிரியர்களை மட்டும் பரிந்துரைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில் செல்ல விரும்பும் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் கருத்துருக்களை மட்டும் முதன்மைக் கல்வி அலுவலரின் பரிந்துரையுடன் அனுப்பப்பட வேண்டும்.
அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களில் மாவட்டக் கல்வி அலுவலராகப் பதவி உயர்வில் செல்ல விருப்பமுடையவர்கள் சார்பான கருத்துருக்களை பள்ளிக் கல்வி இயக்குநருக்கு பரிந்துரை செய்யப்படுவர்.