#JustNow: தகவல் தொழில்நுட்பவியல் துறை பெயர் மாற்றம்!
கோட்டூர்புரத்தில் ரூ.150 கோடியில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப தனித்துவ வளாகம் அமைக்கப்படும் என அறிவிப்பு.
தகவல் தொழில்நுட்பவியல்துறை மானிய மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், தகவல் தொழில்நுட்பவியல்துறை “தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை” என மறுபெயரிடப்படும் என அறிவித்தார். சென்னை கோட்டூர்புரத்தில் ரூ.150 கோடியில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப தனித்துவ வளாகம் அமைக்கப்படும் என்றும் தமிழ்நாடு இ-சேவை மையங்கள் மற்றும் குடிமக்கள் வலைத்தளத்தில் கூடுதலாக 100 மின்னணு சேவைகளை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக செயல்முறை மேலாண்மை நிறுவனங்களை மேம்படுத்த புதிய கொள்கை உருவாக்கப்படும் என கூறினார். இதனிடையே பேசிய அமைச்சர், நவீன தொழில்நுட்பங்கள் மூலம் இ- சேவை 2.0 உருவாக்கப்படும் என்றும் உங்கள் அரசாங்கத்தை அறிந்து கொள்ளுங்கள்” எனும் புதிய மாநில இணையதளம் உருவாக்கப்பட்டு தற்போது உள்ள மாநில இணையதளம், புதிய இணையத் தளத்திற்கு மாற்றப்படும் எனவும் அறிவித்திருந்தார்.