அதிமுக அலுவலகம் செல்ல ஓ.பன்னீர்செல்வத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பு.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் அதிமுக அலுவலகம் சென்று வந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வமும் அலுவலகம் செல்ல திட்டமிட்டுள்ளார். அதிமுக அலுவலகம் செல்லும்போது உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகரன் காவல் துறையினரிடம் மனு அளித்திருந்தார். அதிமுக அலுவலகத்துக்கு ஓபிஎஸ் செல்லும்போது அவரை வரவேற்க தொண்டர்கள் கூடும் வாய்ப்பு உள்ளது. எனவே, இடையுறு இல்லாத வகையில் பாதுகாப்பு தர கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகம் செல்வதற்கு ஓபிஎஸ் நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என்றும் நீதிமன்றம் அனுமதி அளித்தால் ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல பாதுகாப்பு தர தயாராக இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், சென்னையில் உள்ள அதிமுக அலுவலகம் செல்ல ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளது. நீதிமன்ற அனுமதியுடன் வந்தால் மட்டுமே ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாதுகாப்பு தர முடியும் என போலீஸ் அறிவித்துள்ளது.
இதனிடையே, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் டிஜிபி அலுவலகத்துக்கு சென்று நேற்று மனு அளித்திருந்தார். கட்சிக்கு தொடர்பில்லாதவர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைவதை தடுக்க பாதுகாப்பு தேவை. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அதிமுகவும் ஓபிஎஸ்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை. கட்சியில் உறுப்பினர் அல்லாத ஒருவர் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை எப்படி கோர முடியும் என தெரிவித்திருநாதர்.
சென்னை : கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய…
சென்னை : சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள்…
சென்னை : வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் எதிரொலியாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிண்டி அரசு மருத்துவமனையில்…
இலங்கை : இலங்கையின் 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 7 மாணிக்கு தொடங்கியது. இன்று மாலை 4 வரை…
சென்னை : சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வடகிழக்கு பருவமழையின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக…